உடுப்பிட்டி நலன்புரி சங்கம்

கனவு: (Vision) எல்லா வளங்களும் நிறைந்த ஓர் கிராமமாக உடுப்பிட்டி கிராமத்தை உருவாக்கி ஈழத்திலேயே முதல்தர கிராமமாக திகழ வைப்பது.

செயற்திட்டம்: (Mission) உடுப்பிட்டிக் கிராம மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கிளைச் சங்கங்களை அமைப்பதன்மூலம் உடுப்பிட்டி மக்களை அங்கத்தவர்களாக்கி அதனால் பெறப்படும் அங்கத்துவ நிதிமூலமும், தன்னார்வ நிதி பங்களிப்பினூடாகவும் பல செயற்திட்டங்களை நிறைவேற்றி உடுப்பிட்டி கிராமத்தை தன்னிறைவாக்குதல்.

மேலும்எமது உடுப்பிட்டியூர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்

உடுப்பிட்டி கிராமத்தைச் சுற்றிவந்து உற்று கவனித்தால் அதன் அமைப்பும் அதைச் சூழஅமைந்திருக்கும் நிலங்களும் சுற்றாடலில் வசிக்கும் மக்களும் இந்தக் கிராமம் மற்றைய கிராமங்களைவிட வேறுபட்டதென்னபதை உணர்த்தும். செந்நெற்கழனிகளும், தோட்டக்காணிகளும், அவற்றிற்கிடையே நன்னீர் கிணறுகள் மற்றும் சிறு குளங்களும், கால்நடைகள், அவற்றிற்கு தேவையான புற்றரைகள், குட்டடைகள், கேணிகள், துரவுகள், நீர்த்தொட்டிகள், ஆவுரோஞ்சிக் கற்கள், தெற்கு மேற்காக ஓடும் உப்பாறும், இயற்கையில் விளையும் உப்பும், பருவகாலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும் பல பறகைகளும்; ஒரு தனித்துவமான அழகையும், ஐசுவரியத்தையும் தன்னகத்தே எமதுகிராமம் கொண்டுள்ளதென்பதை அவதானிக்கமுடிகிறது.

மேலும்


Photos

Copyright 2015. All rights reserved.
Powered by UK-Soft